Taraka Ratna : தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினர்.. நந்தமுரி தாரக ரத்னா மறைவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் உறவினரும், நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா இன்று காலமானார்.
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தெலுங்கு தேசம் கட்சி மேற்கொண்டு வருகிறது.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லெகேஷ் 'யுவ களம்' என்ற பெயரில் ஆந்திராவில் பேரணி நடத்தி வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பேரணியில் ஜூனியர் என்டிஆரின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமுரி தாரக ரத்னா கலந்துகொண்டார்.
இதையும் படிங்க..Rishab Shetty : தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறாரா காந்தாரா பட புகழ் ரிஷப் ஷெட்டி - உண்மையா.? நடந்தது என்ன.?
பேரணியின் போது தாரக ரத்னாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 23 நாட்களாக உயிருக்குப் போராடிய நந்தமுரி தாரக ரத்னா தற்போது மரணமடைந்தார். பெங்களூருவில் உள்ள நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் பாலகிருஷ்ணா உள்ளிட்ட நந்தமுரி குடும்பத்தினர் அவரைப் பார்க்க பெங்களூரு விரைந்தனர். ஆனால் தாரக ரத்னா சிறந்த சிகிச்சையைப் பெற்ற பிறகும் உயிர்வாழ முடியாததால் அனைத்து முயற்சிகளும் வீணாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ‘ஒகடோ நம்பர் குராடு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் கடைசியாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியான 9 ஹவர்ஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!