நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்திற்கு பிறகு, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'மகளிர் மட்டும்', 'காற்றின்மொழி', 'நாச்சியார்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது, இந்த படத்தை அறிமுக இயக்குனர்  எஸ்.ராஜ் என்பவர் இயக்குகிறார். 

இதில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் 'காக்க காக்க' படத்தை தொடர்ந்து மீண்டும் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி ஷெட் போட்டு பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்றது.

மேலும் தற்போது படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பகலில் சாதுவான பள்ளி ஆசிரியையாகவும், இரவில் ராட்சஷியாகவும், 'அந்நியன்' போல மாறி விடும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை, ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். மேலும் படத்திற்கு ராட்சஷி என்ற டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து விரைவில் வெளியாகும் என தெரிகிறது.