நடிகை மஞ்சு வாரியர் நடித்து மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் "ஹவ் ஓல்டு ஆர் யூ" . இந்த படத்தை பார்த்து விட்டு தான் நடிகை ஜோதிகா... தமிழில் இதை ரீமேக் செய்ய வேண்டும் என கணவர் சூர்யாவிடம் கோரிக்கை வைக்க அதை ஏற்று கொண்ட சூர்யா தொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தை ரீமேக் செய்தார். 

ஜோதிகாவும் திருமணத்திற்கு பின் முதல் முறையாக இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.  இந்த படத்தின் மூலம் தனது 7௦ஆம் வயதில் வெளிச்சத்துக்கு வந்த நாடக நடிகை சேதுலட்சுமி. மலையாளத்தில் இவர் நடித்த கேரக்டரிலேயே தமிழில் 36 வயதினிலே என ரீமேக் ஆனபோது அதே கேரக்டரில் ஜோதிகாவுடன் நடித்தார்.

இந்நிலையில் இவரது மகன் கிட்னி பாதிக்கப்பட்டவராம். மகனின் உயிரை காப்பாற்ற  இவர் தன்னுடைய கிட்னி ஒன்றை தானமாக கொடுக்க முன்வந்தபோது, தாயின் உடல்நிலை, மற்றும் அவருடைய வயது கருதி அதை மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.

தற்போது இவர் தான் நடித்து சம்பாதிக்கும் பணத்தை மகனின் சிகிச்சைக்காக செலவிட்டு வருகிறார் சேதுலட்சுமி.

இந்தநிலையில் தனது மகனின் இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுவதாகவும், யாரேனும் உதவி செய்யுங்கள் என கதறியபடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.