ரஜினி தயவால் நல்ல விளம்பரம் கிடைத்து நேற்று தடபுலாக ரிலீஸான ஜெயம் ரவியின் ‘கோமாளி’பட ஹெச்.டி. பிரிண்டை ஒரு நாள் கூட தாமதிக்காமல் நேற்றே வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ் என்கிற திருட்டு இணையதளம். இதனால் ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் படு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் 15) வெளியான ’கோமாளி’ படத்தை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. படம் வெளியான முதல் நாளே திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டதால் ’கோமாளி’ படத்தின் வசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.ஜெயம் ரவி, காஜல் அகர்வால் யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) வெளியான படம் கோமாளி. இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக கேலி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய படம் இது. பின்னர் அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன. ரஜினிக்குப் பதிலாக அக்காட்சியில் நாஞ்சில் சம்பத் கிண்டலடிக்கப்பட்டார்.

சுதந்திர தினமானநேற்று வெளியான இந்தப் படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும்  ஓரளவுக்கு  பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தன. இதனால் படக் குழுவினர் சந்தோஷம் அடைந்தனர். அதற்குள்ளாக நேற்று மாலையில் முழுப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.ஒவ்வொரு படத்தையும் இதேபோல ரிலீஸ் தினத்தன்று அல்லது அதற்கு அடுத்த தினம் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக வைத்திருக்கிறது. நீதிமன்றம் தடை விதித்தாலும்கூட அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு இந்த அட்டகாசத்தை தமிழ் ரக்கர்ஸ் செய்து வருகிறது. இதற்கு முந்தைய அஜீத் ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’படமும் ரிலீஸ் தேதியன்றே இதே தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.