Asianet News TamilAsianet News Tamil

ஜீவஜோதியின் 18 வருட சட்ட போராட்டம் படமாகிறது..!

ஜீவஜோதி வாழ்க்கை சுமார் 150 கோடி பட்ஜெட்டில் சினிமா படமாக உள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Jeevajothi 18 year legal battle becomes a movie
Author
Chennai, First Published Jul 8, 2021, 1:06 PM IST

ஜீவஜோதி வாழ்க்கை சுமார் 150 கோடி பட்ஜெட்டில் சினிமா படமாக உள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவஜோதியின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய 5 மொழிகளில் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசை பட்டதால், ஜீவஜோதி காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் சாந்தகுமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு துணிந்தார். ஆரம்பத்தில் இவருடைய பெயர் இந்த கொலைவழக்கில் அடிபடவில்லை என்றாலும், ஜீவா ஜோதி தன்னுடைய கணவர் மரணத்திற்கு காரணம் ராஜகோபால் என குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்: மீண்டும் அஜித்தை கடுப்பேற்றும் தல ரசிகர்கள்! கால்பந்து போட்டியையும் விட்டு வைக்காமல் அட்ராசிட்டி!
 

Jeevajothi 18 year legal battle becomes a movie

அதைத் தொடர்ந்து நடந்த வழக்குகள் கோர்ட்டில் குற்றவாளியாக ராஜகோபால் அறிவிக்கப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.  இந்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படம் தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்: 8 படங்கள் ஒன்றாக நடித்தோம்... நடிகர் திலீப் குமார் மறைவு குறித்து பேசி கலங்கிய நடிகை வைஜந்தி மாலா!
 

Jeevajothi 18 year legal battle becomes a movie

ஜீவஜோதி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு, மற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. "இந்த  படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது....  எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி உணர்வுபூர்வமாக சட்டத்தின் வாயிலான எனது போராட்டத்தை வசதிபடைத்த உணவகம் முதலாளிக்கு எதிராக, 18 வருடங்கள் நடந்த போரை ஜங்கிளி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை நான் அனுபவித்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்:குடும்பத்துக்காக திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா நயன்தாரா? இது தான் காரணமாம் வெளியான தகவல்!
 

Jeevajothi 18 year legal battle becomes a movie

இப்படத்திற்கு திரைக்கதை ஆசிரியராக பவானி அய்யர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios