முதன்முறையாக தேசிய விருது வென்ற நடிகையுடன் கூட்டணி அமைத்த ஜெயம் ரவி... வைரலாகும் ‘சைரன்’ மோஷன் போஸ்டர்
Jayam Ravi : அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் ஜெயம் ரவி, தற்போது புதிதாக சைரன் என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னர் ஜெயம்ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்தவகையில் இவர் கைவசம் அகிலன், இறைவன், ஜன கன மன, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம், ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 என அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் கல்யாண் இயக்கியுள்ள அகிலன் படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் இறைவன், ஜன கன மன ஆகிய இரண்டு படங்களையும் அஹமத் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... போலீஸுக்கே டிமிக்கி கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்..மீரா மிதுனை வலைவீசி தேடிவரும் காவல்துறை
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அதன்படி சைரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
மேலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர்கள் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி ரூபன் மேற்கொள்ள உள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... விக்ரமின் கோப்ரா படத்துக்கும் அதிகாலை 4 மணி காட்சி ரத்து...! FDFS எத்தனை மணிக்கு தெரியுமா?