'தனி ஒருவன் 2' ஜெயம் ரவியின் புதிய புரோமோவுடன் படத்தின் மிகப்பெரிய ட்விஸ்டை உடைத்த மோகன் ராஜா!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் 'ஜெயம்' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்', 'தில்லாலங்கடி' போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் ரீமேக் படங்களை இயக்கி பிரபலமான மோகன் ராஜா, அவரே கதை - திரைக்கதை எழுதி இயக்கிய முதல் திரைப்படம் 'தனி ஒருவன்'.
2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், பல விருதுகளை வாங்கி குவித்தது. மேலும் இந்த படத்தின் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக சித்தார்த் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம்பிடித்தார் அரவிந்த்சாமி. விறுவிறுப்பான கதை களத்துடன் ஆக்சன், காதல், அரசியல், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமான 'தனி ஒருவன்' வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இது என்னடா 'ஜெயிலர்' படத்திற்கு வந்த சோதனை! அதிரடியாக நீக்கப்படும் காட்சி...உயர் நீதிமன்றம் உத்தரவு!
அதே போல் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவருக்குமே திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பலர் எப்போது 'தனி ஒருவன் 2' திரைப்படம் உருவாகும் என கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயம் ரவி - மோகன் ராஜா இணையும் தனி ஒருவன் 2 படம் குறித்த அறிவிப்பை புதிய ப்ரோமோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
'தனி ஒருவன் 2' படத்தை முதல் பாகத்தை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் தான் இரண்டாம் பாகத்தையும்
தயாரிக்க உள்ளது. அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புரோமோவின் மூலம்... இந்த படத்தில் இருக்கும் ட்விஸ்ட் ஒன்றை மோகன் ராஜா வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாகத்தில் "நீ யார் என்று சொல்லு... உன் எதிரி யார் என்று நான் சொல்கிறேன்" என தன்னுடைய எதிரியை தானே முடிவு செய்து கொண்டு மித்ரன் களத்தில் இறங்குவார். ஆனால் இந்த முறை ஜெயம் ரவியை தேடி வில்லன் வரப்போகிறாராம். ஆனால் யார் அந்த வில்லன் என்கிற தகவலை தற்போது வரை படக்குழு வெளியிடவில்லை.
முதல் பாகத்தில் ஹீரோவை விட அரவிந்த்சாமியின் கதாபாத்திரம் வில்லனாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லன் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே போல் முதல் பாகத்தில் நடித்த நயன்தாரா தான் இரண்டாவது பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது படக்குழு வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.