சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா. 1978ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற இந்தி படத்தின் ரீமேக் தான் என்றாலும், சூப்பர் ஸ்டாரின் தனிப்பட்ட ஸ்டைலால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த காலக்கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த். பத்திரிகையாளரை அடிக்க பாய்ந்தார், குடி போதையில் கண்ணாடிக்களை உடைத்தார் என அடுத்தடுத்து ரஜினி பற்றி பரவிய வதந்திகளால் மன அழுத்தத்தில் அந்த அதிரடி முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

ரஜினியை இந்த மனநிலையில் இருந்து மாற்ற முடிவெடுத்த இயக்குநர் பாலாஜி, பில்லா திரைப்படத்தில் நடிக்க ரஜினியை ஒப்பந்தம் செய்தார். 25 வாரங்கள் வரை ஓடி வெற்றி கண்ட பில்லா திரைப்படம் வசூல் ரீதியாக வாரிக்குவித்தது. இந்த படத்தில் முதலில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவிருந்தது ஜெயலலிதா தான். ஆனால் அப்போது அரசியலில் களம் இறங்கியதால் ஜெயலலிதா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.  

இதையும் படிங்க:  ப்பா...‘கருப்பன்’ பட நடிகையா இது?.... ஓவராய் இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய தான்யா...!

அந்த சமயத்தில் பத்திரிகை ஒன்றில் ஜெயலலிதாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அரசியலில் நுழைந்ததாக விமர்சித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெயலலிதா அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சினிமாவில் மீண்டும் நடிப்பதற்கு நான் போராடவில்லை. உண்மையில் படத்தில் நடிக்க சொல்லி நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. பில்லா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக அந்தப் பில்லா தயாரிப்பாளர் பாலாஜி என்னை தான் முதலில் அணுகினார். நான் மறுத்ததால் தான் அந்த கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய கடிதம் இதோ...