'பலே வெள்ளைய தேவா' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததாலோ என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களிலும் ஹோம்லியாகவே நடித்தார்.

ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் என்னவோ, இவருக்கு அதிகப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சிபிராஜ் உடன் 'மாயோன்' என்கிற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகத நிலையில் கைவசம் வேறு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தொடர்ந்து குடும்ப குத்துவிளக்காக நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்று தீர்மானித்த தான்யா, மற்ற நடிகைகளைப் போல ஹாட் போட்டோ ஷூட்டை கையில் எடுத்துவிட்டார். 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

சமீபத்தில் விதவிதமான மார்டன் உடையில் தினுசு, தினுசாக தன்யா கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. தற்போது தன்யா வெளியிட்டுள்ள படுகவர்ச்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. கண்ணில் பரவசத்தோடு, செம்ம ஹாட் உடையில் தான்யா ராஜேந்திரன் பதிவிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலானது. குடும்ப குத்துவிளக்காக ஜொலி, ஜொலித்த தான்யாவா இது என ரசிகர்கள் வாய்பிளந்தனர். 

இதையும் படிங்க: வாயால் கெட்ட சிம்பு... உதறி தள்ளிவிட்டு அருண் விஜய்யை ஓகே செய்த “சைக்கோ” இயக்குநர்...!

இந்நிலையில் தான்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கறுப்பு நிற ஷார்ட் உடையில் போஸ் கொடுத்துள்ள தான்யா முன்பை விட செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். கையில் குத்தியிருக்கும் பச்சை தெரியும் படியாக கண்ணில் பரவசம் பொங்க தான்யா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்ட தான்யாவின் கலக்கல் கிளிக்ஸ் இதோ...