ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று உலகம முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜவான். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் - அட்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு, சன்யா மல்ஹோத்ரா, ரித்தி டோக்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில் ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல சாதனைகளை முறியடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜவான் பட ரிலீஸை முன்னிட்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜவான் படக்குழுவினருகு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். லோகேஷின் இந்த வாழ்த்துக்கு பதிலளித்த ஷாருக்கான், லோகேஷ் கனகராஜிடம் ஷாருக்கான் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், " ஷாருக்கான் சார், எனது அன்பு சகோதரர்கள் அட்லி, அனிருத், நயன்தாரா, விஜய் சேதுபதி அண்ணா மற்றும் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் ஜவான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக என வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

மறுபுறம், ஷாருக்கான் ஒரு சிறப்பு கோரிக்கையுடன் லோகேஷ் பதிவை ரீ ட்வீட் செய்தார். தனது பதிலில், "மிக்க நன்றி. சிறிது நேரம் கிடைக்கும்போது படத்தை முயற்சி செய்து பாருங்கள். தமிழில் படம் பார்த்து, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். லியோவுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஷாருக்கானின் இந்த கருத்துக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் மேலும் கூறினார்: "நீங்கள் அனைவரும் சரியாக செய்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் ஷாருக்கான் சார்.. ஜவான் படம் பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன். லியோ படம் வெளியான உடன் உங்களுடன் பார்க்க விரும்புகிறேன்.. உங்களின் கருத்துக்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Scroll to load tweet…