கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள ஜப்பான் படத்தில் இடம்பெற்ற டச்சிங் டச்சிங் பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜப்பான். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 10-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் அதன் புரமோஷன் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதுமட்டுமின்றி இப்படத்தின் அப்டேட்டுகளும் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜப்பான் படத்தில் இடம்பெற்ற டச்சிங் டச்சிங் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்தப் பாடலை நடிகர் கார்த்தியும், பாடகி இந்திரவதி செளகானும் இணைந்து பாடி உள்ளனர்.

பிரம்மாண்ட அரங்கில் தமன்னாவின் காவாலா பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம்ம சூப்பராக படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் இடையே இந்த பாடலை பாடியவர் கோல்டன் ஸ்டார் ஜப்பான் என்று குறிப்பிட்டுள்ளனர். டச்சிங் டச்சிங் பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Touching Touching - Video Song | Japan (Tamil) | Karthi, Anu Emmanuel | GV Prakash | Raju Murugan

இதையும் படியுங்கள்... நிக்சனின் சில்மிஷ வேலைகளை குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்... ச்சீ-னு காரித்துப்பிய ஹவுஸ்மேட்ஸ்