தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு பல இளம் நடிகர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் வாதிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்.

இன்று இந்திய டுடே நடத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன், தன்னுடைய, திரையுலக அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்சிக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி குறித்து பிரபல தனியார் தொலைகாட்சியில் தனது கருத்தை பகிர்துள்ளர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இதில் செய்தியாளர் ஜல்லிகட்டை, போட்டி என்று சொன்னதற்கு நன்றி என கூறி, இதற்கு ஏறு தழுவுதல் என்பது தான் சரியாக பொருந்தும் என கூறி பேச தொடகினர் கமல்ஹாசன்.

ஜல்லிகட்டை பலர் மாடு பிடித்தல் என கூறினாலும் ஏறு தழுவுதல் என்பதில் உள்ள ஒரு ஈர்ப்பும் பெருமையும், மிகவும் மதிக்கத்தக்கது என கூறினார்.

மேலும் மேற்கத்திய நாடுகளில் நடைபெறும், மாடு சண்டைகளில் பயன்படுத்த  மாடுகள் மீது பரிவோ பாசமோ இருக்காது,  என்றும் ஆனால் ஜல்லிக்கட்டிற்கு விடும் மாடுகளை மீண்டும் தமிழர்கள் பாசம் காட்டி வளர்ப்பார்கள் என பெருமையோடு கூறியுள்ளார் கமல்ஹாசன்.