ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு நாளுக்கு நாள் தொடர்ந்து ஆதரவும் ஆழத்தன்மையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், மன்சூர் அலிகான், மயில்சாமி ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நிலையில்,
இளம் இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதி , ஜி. வி. பிரகாஷ் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தன்னெழுச்சியாக தமிழகம் திரண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக சேவையில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் பலர் பட்டினியால் வாடுவதாகவும் அவர்களுக்கு குடிக்க குடிநீர் கூட இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இந்த உடனடி தேவைக்கு தாம் உடனடியாக ஒரு கோடி ருபாய் வரை செலவு செய்ய தயாராக இருப்பதாக அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராகவா லாரன்ஸ் இப்படி கூறியிருப்பது ஆர்ப்பாட்டக்காரகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்களுடன் மணிக்கணக்கில் வெயிலில் அமர்ந்திருக்கும் லாரன்ஸ், நிச்சயம் அரசு இந்த போராட்டத்துக்கு செவி சாய்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
