Asianet News TamilAsianet News Tamil

“ ஜெயிலர் படம் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு.. ஆனா..” சக்சஸ் மீட்டில் உண்மையை உடைத்த ரஜினி..!

அனிருத்தின் இசை இல்லாமல் ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்காது என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

Jailer movie was very average says Rajinikanth shared secret in success meet Rya
Author
First Published Sep 21, 2023, 9:51 AM IST

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் ₹600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ரூ.100 கோடி காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஆடம்பர காரை பரிசாக வழங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் கலாநிதி மாறன் ஜெயிலர் குழுவிற்கு ஒரு ஆடம்பர விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத்-க்கு பாராட்டுகளை தெரிவித்தார். அனிருத்தின் இசை இல்லாமல் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 

ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ரஜினி கலாநிதி மாறன் வாங்கிக் கொடுத்த காரில் தான் நான் வந்தேன்.. இப்ப தான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்ற உணர்வே எனக்கு வந்துள்ளது. ஒரு படத்தின் வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும், அதில் நடித்தவர்களை எப்படி கௌரவிக்க வேண்டும் என்று கலாநிதி மாறன் மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ரீ-ரெக்கார்டிங்கிற்கு முன்பு ஜெயிலர் படம் சுமாராக தான் இருந்தது. ஆனால் அனிருத் தனது இசையால் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளார். எப்படியாவது எனக்கு ஹிட் கொடுக்க வேண்டும். நெல்சனுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என்று தனது பின்னணி இசையின் மூலம் படத்தை நிற்க வைத்துள்ளார்.. சூப்பர் அனிருத்.. வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 

35 லட்சமா.. நான் கேட்டதைவிட 3 மடங்கு அதிகமா கொடுத்தாங்க சாரே! ஜெயிலர் சம்பள சர்ச்சை குறித்து விநாயகன் விளக்கம்

மேலும் பேசிய ரஜினி "நெல்சன் மற்றும் அனிருத்துடன் இணைந்து படத்தை முதலில் பார்த்தவர் கலாநிதி சார் தான். பேட்ட போல் வரும் என நினைக்கிறீர்களா என்று அனிருத் கேட்டபோது, இது 2023-ம் ஆண்டு பாட்ஷா என்று கலாநிதி மாறன் கூறினார். ஆடியோ வெளியீட்டு விழாவில், படம் மெகா ஹிட் ஆகப் போகிறது என்று அவர் அறிவித்தார். இதைப் பொதுவெளியில் வெளிப்படையாகச் சொல்வது சாதாரண விஷயம் இல்லை, அதனால்தான் அவர் ஒரு ஜோதிடராக முடியும் என்று நான் சொல்கிறேன்.” என்று கூறினார்

மேலும் “ ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆனதால் 5 நாட்கள் மட்டுமே சந்தோஷமாக இருந்தேன். இதுக்கு மேல, எப்படி இன்னொரு ஹிட் கொடுப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டேன். எனது அடுத்த படத்தைப் பற்றியும், இப்போது அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால் அதை எப்படி இன்னும் பெரிய வெற்றியாக மாற்றுவது என்றும் டென்ஷனாக இருக்கு.. என்ன செய்வது என்று தெரியவில்லை.” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios