'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஹுக்கும்' வெளியாகும் தேதி அறிவிப்பு!

'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'ஹுக்கும்' லிரிக்கல் பாடல் ரிலீஸ் ஆகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 

jailer movie second single Hukum release date announced

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷம் ஒருபுறம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க, படத்தின் ப்ரோமோஷன் பணியிலும் முழு மூச்சியில் இறங்கி உள்ளது படக்குழு.

படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், கடந்த வாரம் 'ஜெயிலர்' படத்தில் தமன்னா வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட, காவாலா பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில்  இரண்டாவது சிக்கில் பாடலின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்த நிலையில், சற்று முன்னர் 'ஹுக்கும்' என்கிற இந்த பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தலைவரின் மாஸ் போட்டாருடன் படக்குழு தெரிவித்துள்ளது.

jailer movie second single Hukum release date announced

முதல் பாடலான காவாலா கலர்ஃபுல்லாகவும், ரணகளமாகவும் இருந்த நிலையில் இரண்டாவது பாடல் தலைவரின் என்ட்ரி பாடலாக இருக்கும் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

நானி - மிருணால் தாக்கூர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலிப் குமார் இயக்கி உள்ள, இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. குறிப்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷரீஃப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

jailer movie second single Hukum release date announced

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!

'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காவாலா பாடல் வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களையும் ஆட்டம் போட வைத்தது. தினமும் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து, தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு லைக்ஸுகளை  அள்ளி வரும் நிலையில் 'ஹுக்கும்' பாடல் மீதான எதிர்பார்ப்பும் கூடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios