ஆன்லைனில் லீக்கான ஜெயிலர் HD பிரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழுவினர்.. பாக்ஸ் ஆபிஸ் வசூலை பாதிக்குமா?
ஜெயிலர் படத்தின் HD பதிப்பு ஆன்லைனில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே, படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் HD பதிப்பு ஆன்லைனில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக ஒரு படம் ஓடிடியில் வெளியான பிறகே அப்படத்தின் HD ப்ரிண்ட் இணையத்தில் வெளியாகும். ஆனால் ஓடிடி வெளியீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே ஜெயிலர் ஆன்லைனில் வெளியானதால் ரஜினியின் தீவிர ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஜெயிலர். படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், இந்த இணைப்பைப் பகிர வேண்டாம் என்றும் வேண்டாம் என்றும் பலர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் உலகம் முழுவதும் ரூ.550 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் தற்போது உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மறுபுறம் 'ஜெயிலர்' படத்தின் HD பிரிண்ட் ஆன்லைனில் வெளியாகி உள்ளது, திரையரங்கு உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகளில் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது HD பிரிண்ட் வெளியாகி உள்ளதால் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை ரோகினி சில்வர் ஸ்க்ரீன்ஸின் இயக்குனர் ரேவந்த் சரண், ஜெயிலர் படத்தின் லிங்கை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் பதிவில், "#Jailer திரைப்படத்தின் HD பிரிண்டின் எந்த வடிவத்தையும் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்றும், மக்கள் அதை திரையரங்குகளில் ரசிக்க வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். எந்த விலையிலும் திருட்டுத்தனத்தை ஆதரிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்
ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ள நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற அறிவிப்பை அந்நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியிருக்கும் 'ஜெயிலர்' படத்தில், ரஜினிகாந்த் புலி முத்துவேல் பாண்டியனாக மிரட்டி உள்ளார். ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மோகன்லால், ஷிவா ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..