கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில்  மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

மேலும் செய்திகள்: அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? விசாரணையில் வெளிவந்த தகவல்!

'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால், இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசாகும் போதே ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ட்ரைலரின் ஒவ்வொரு காட்சிகளிலும், அதிரடி காட்சிகளும், பச் வசனங்களும் தூள் பறக்கிறது. அதே போல், இதுவரை பார்த்திடாத தனுஷையும் கண் முன் நிறுத்தியுள்ளார் கார்த்தி சுப்புராஜ். இந்த ட்ரைலரில் தனுஷ் மற்றும் ஜேம்ஸ் காஸ்மா ஆகியோரின் காட்சிகளே அதிகம் உள்ளது. அதே போல் ஐஸ்வரியா லட்சுமி, மற்றும் கலையரசன், யோகி பாபு உள்பட ஒரு சிலரின் காட்சிகளும் ட்ரெய்லரில் உள்ளது.

மேலும் செய்திகள்: அடக்கொடுமையே... விமான விபத்தில் பிரபல நடிகர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

குறிப்பாக தப்பு பண்றோம் அவ்வளவு தான். சின்ன தப்பு, பெரிய தப்பு எல்லாம் கிடையாது’ என்ற வசனமும் ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்று தனுஷ் கெத்தாக பேசும் வசனமும் வேற லெவல். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷுக்கு டஃப் கொடுக்கும்... வாரிசு நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! அழகில் மயக்கும் கியூட் போட்டோஸ்..!

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் இதோ... 


YouTube video player