கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓடிடியில் மொத்தம் 17 மொழிகளில் 'ஜகமே தந்திரம்' ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: மஞ்சள் நிற பட்டு புடவையில்... தங்க தாமரை போல் மின்னும் வித்யா பிரதீப்..! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!
 

'கர்ணன்' படத்திற்கு முன்னரே, 'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால்,   இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையே மன கஷ்டங்களும் ஏற்பட்டது. இதன் காரணத்தினால் என்னவோ படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியான போது அதில் நடிகரின் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை. இது தனுஷ் ரசிகர்களை உச்ச கட்ட கோவத்தில் ஆழ்த்தியது.

தனுஷ் இல்லை என்றால் 'ஜகமே தந்திரம்' படமே இல்லை... அப்படியே படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் படத்தை புறக்கணிப்போம் என கோவத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி,  நெட்பிளிக்சில் வெளியாகும் என சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தது. 

மேலும் செய்திகள்: நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்..!
 

கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவை மீண்டும் சுழட்டி அடித்து வருவதால், திரையரங்கில் வெளியாக இருந்த படங்கள் கூட மீண்டும் ஓடிடிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 'ஜகமே தந்திரம்' படம் குறித்த அடுத்த சூப்பர் டூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது ஓடிடி தளத்தில் 'ஜகமே தந்திரம்' திரைப்படம் மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ளதாம். இதற்க்கு முன் எத்தனையோ படங்கள் ஓடிடியில் ரிலீசாகி இருந்தாலும் அதிக மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.