ட்ரிபிள் எக்ஸ் படங்களை விட ஆபத்தானவை அதுபோல பாவனை செய்து எடுக்கப்படும் படங்கள். சமீபமாக தமிழில் ‘ஹரஹர மகா தேவகி, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற பக்திப்படங்கள் பெருகிவருகின்றன. இந்த வரிசையில் இடம்பிடிக்க வருகிறது விமெல், ஆஜ்னா ஜவேரி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு’.

’’இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான்..இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர்...அதைத் தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்திருக்கிறோம்’ என்கிறார் படத்தின் இயக்குநர் ஏ.ஆ.முகேஷ் அப்பாவியாக.

ஆனால் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்காட்சிகளில் விமலும், ஆஷ்னா சாவேரியும் காமத்தின் உச்சத்திற்கே சென்றதை போல் தோன்றும் அளவுக்கும் நெருக்கமாக நடித்துள்ளனர் என்பதை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. திரைப்படத்தின் புகைப்படங்களும் விமல் ஆஷ்னா சவேரி மட்டும்  நெருக்கமாக நடிக்கவில்லை மற்ற நடிகைகளும் நெருக்கமாக நடித்துள்ளனர் என்பதை சொல்கிறது. 

‘ இவனைப் போட்டுரவா? ... எப்பப்பாரு உனக்கும் உங்க அக்காவுக்கும் யாரையாவது போடுறதைப்பத்தியேதான் நினைப்பு’... பொம்பளைங்களே அவ்வளவு பெரிய சாமான்களைத் தூக்கும்போது ஆம்பளைங்க நீங்க’’ இவை இரண்டும் இப்படத்தின் ட்ரெயிலரில்  காட்டப்பட்ட வசனங்களின் சாம்பிள். இனிமே வசனங்களுக்கு டபுள் மீனிங் போதாது. ஏழெட்டு மீனிங் வேண்டும் என்று நினைத்து மெனக்கெட்டு எழுதியிருப்பார்கள் போல. வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு.