இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பாக இதே ஆகஸ்ட் 31ஆம் தேதி உலக அளவில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் மிரட்டிய மங்காத்தா என்ற திரைப்படம் வெளியானது.
முதல்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் மங்காத்தா. அதுவரை இல்லாத அளவில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் தல அஜித் மற்றும் மூத்த நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய இருவரும் நடித்து கலக்கிய திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தல அஜித் குமார், விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடிக்க, அவருடன் இணைந்து கடத்தலில் ஈடுபடும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள். இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் வண்ணம் எடுத்திருப்பார் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள். இது படத்தின் வெற்றியை அதிகமாக்கியது என்றால் அது மிகையல்ல.
ஜவான் ஆடியோ லாஞ்சுக்கு ஆப்சென்ட் ஆன நயன்தாரா... அப்செட் ஆன ரசிகர்கள்
மேலும் இந்த படத்தின் கூடுதல் சிறப்பாக முன்னணி நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதே போல இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் பிரபல நடிகர்கள் வைபவ், அஸ்வின் காக்கமாகவும், பிரேம்ஜி அமரன், மஹத் ராகவேந்திரா, ஜெயா பிரகாஷ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் ரவிகாந்த் ஜமால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் இதுவரை சுமார் 78 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும். அதேபோல தமிழகத்தில் மட்டும் சுமார் 54 கோடி வசூல் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இது மங்காத்தா டே என்று கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.