நம் குழந்தைகள் சினிமாவை பற்றி தெரிந்து கொள்வதைவிட அரசியலை தெரிந்து கொள்வதே முக்கியம் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

மறைந்த தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் திரை பிரமுகர்கள், மாணவ மாணாவியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினர் கலந்து கலந்து கொண்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

இந்த இரங்கல் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, “நீதிக்காக நாம் போராடிப் போராடி போராட்டம் என்றாலே அரசுக்கு சலித்துவிட்டது.

எனவே, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து அனிதாவிற்கான போரட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

நம் குழந்தைகளுக்கு அரசியல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்வதைவிட அரசியலை பற்றித் தெரிந்து கொள்வதுதான் முக்கியம்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.