ishwarya rai cry

நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகிப் பட்டத்தை வென்று பல வருடங்கள் ஆனாலும் தற்போது வரை அனைவராலும் உலக அழகியாகப் பார்க்கப்படுபவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சமீபத்தில் இவருடைய, குழந்தை ஆராத்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் ஷாருக் கான், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு ஆராத்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாட ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்றுள்ளார். இவர் அங்கு வரும் செய்தியை அறிந்துகொண்ட ஊடகங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்தனர். பொதுமக்கள் பலரும் அங்குக் கூடினர்.

அனைவரும் ஐஸ்வர்யா ராயைப் பார்க்க முட்டி மோதிக்கொண்டதால் அங்கு சிறு கலாட்டாவே நடந்து விட்டதாம். ஐஸ்வர்யா ராய் குழந்தைகளைப் பார்க்கும் போது அனைத்து மீடியாக்களும் ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்ததால். குழந்தைகள் சிலர் அழத் தொடங்கி விட்டனராம்.

இதனால் பத்திரிகையாளர்கள் மேல் உள்ள கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் அங்கே கண்கலங்கியபடி செய்வதறியாது அந்த இடத்தை விட்டு வெளியேறினாராம் ஐஸ்வர்யா ராய்.