Asianet News TamilAsianet News Tamil

சந்தானத்தின் உறவுக்கார பெண் கொலையில் இப்படி ஒரு கொடூரமா? வெளியே வந்த நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்..!

பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை திருவாரூரில் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்த பட்ட விசாரணையில் பல எதிர்பாராத உண்மைகள் வெளியாகி நெஞ்சை உலுக்கி உள்ளது.
 

Is there such a horror in the murder of Santhanam niece?
Author
Chennai, First Published Jun 15, 2021, 7:14 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப் பெண்ணை திருவாரூரில் வேன் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்த பட்ட விசாரணையில் பல எதிர்பாராத உண்மைகள் வெளியாகி நெஞ்சை உலுக்கி உள்ளது.

மேலும் செய்திகள்: ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளுடன் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட உணர்வு பூர்வமான வீடியோ..!
 

திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டானை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி(30). இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவருக்கும்  5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. வெளிநாட்டில் வேலை செய்து வரும் விஷ்ணுபிரசாத் திருமணமானவுடன் மனைவியை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  விஷ்ணுபிரசாத் மனைவி, குழந்தையை  கிடாரங்கொண்டானுக்கு அனுப்பி விட்டார். 

தந்தை வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதி ஆந்தக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மே 21ம் தேதி  ஜெயபாரதி  பணி முடிந்து  இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஏடிஎம்முக்கு பணம் நிரப்பும் வாகனம், இருசக்கர வாகனம் மீது பொதியத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விபத்து என்று கருதப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட கொலை என ஜெயபாரதியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் செய்திகள்:தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷாவுடன் மொட்டை ராஜேந்திரன்..! வைரலாகும் புகைப்படம்..!
 

அதே போல் தன்னுடைய உறவுகாரண பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மங்கள், நீங்க வேண்டும் என சந்தானத்தின் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் சரக்கு வாகனத்தை ஊட்டி வந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் அவர்கள் பாணியில் விசாரணை செய்த போது, வெளிநாட்டிலிருந்தே விஷ்ணுபிரசாத் தான் இந்த கொலைக்கு பின்னணியாக இருந்தது தெரியவந்தது. 

 இதுதொடர்பாக வேன் உரிமையாளர் திருவாரூர் பவித்ரமாணிக்கத்தை சேர்ந்த செந்தில்(32) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது உறவினர்களான அரசு பஸ் டிரைவர்கள் குடவாசலை சேர்ந்த ராஜா, ஜெகன், மற்றொரு செந்தில் ஆகியோரை தேடி வந்த நிலையில் அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜெயபாரதியிடம் இருந்து விவாகரத்து பெற தயாராக இருந்த விஷ்ணு பிரசாத் வேலைசெய்யும் நிறுவனத்தில் ஜெயபாரதி கணவர் மீது புகார் அளித்ததால், அவருக்கு வேலை பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே... அந்த புகாரை வாபஸ் பெற கூறியும் ஜெயபாரதி திரும்ப பெறாததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்:பிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது? கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..!
 

சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தால், இது விபத்து என கேஸ் முடிந்து விடும் என பக்காவாக பிளான் போட்ட, விஷ்ணு பிரசாந்தின் மைத்துனர்   இதற்கு மூளையாக செயல்பட்டு, 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து, பழைய சரக்கு வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு நாள் முழுக்க ஜெயபாரதியை பின்தொடர்ந்துள்ளனர். அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில், அந்த வாகனத்தின் ட்ரைவர் பிரசன்னா என்பவரை வைத்து இந்த விபத்தை நடத்தியுள்ளனர். அதிலும் ஜெயபாரதியை பனை மரத்துடன் மோதி, அவர் உடல் நசுங்கும் வரை பிரசன்னா வாகனத்தை இயக்கி கொண்டே இருந்ததாக கூறி நெஞ்சை பதறவைத்துள்ளார்.

மேலும் செய்திகள்:உச்சகட்ட கவர்ச்சி அவதாரம் எடுத்த மாளவிகா மோகனன்! டாப் ஆங்கிளில் தாறுமாறு கிளாமரை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
 

இந்த கொலை வழக்கு தொடர்பாக அமெரிக்காவில் உள்ள விஷ்ணு பிரசாத்திடமும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதகரத்தில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக சந்தானம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே... இந்த கொலை வழக்கில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios