தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷாவுடன் மொட்டை ராஜேந்திரன்..! வைரலாகும் புகைப்படம்..!
'தெறி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்தரனுடன், தளபதியின் மகன் மற்றும் மகள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் முதல்முதலாக நடித்த திரைப்படம் 'தெறி'. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.
விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்த இந்த படத்தில், சமந்தா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் எமி ஜாக்சன், சுனேனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
போலீஸ் அதிகாரியான விஜய்யின் எதிரிகள் சமந்தாவை கொலை செய்த பின்னர், அவர் ஒரு சிங்கிள் ஃபாதர்ராக இருந்து தன்னுடைய குழந்தையை எப்படி வளர்க்கிறார் என்பதை, பல்வேறு திருப்புமுனைகள், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்திருந்தார் இயக்குனர் அட்லீ.
விஜய்யின் கியூட் மகளாக, பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
அதே போல், நைனிகாவின் பெரிய வயது கதாபாத்திரத்தில் விஜய்யின் மகள் திவ்யா சாஷா இறுதி காட்சியில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மொட்டை ராஜேந்தரனுடன் திவ்யா ஷாஷாவும், விஜய்யின் மகன் சஞ்சய்யும் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.