'ஆனந்த யாழ்' பாடலோடு, தன்னுடைய மகளை யுவன் ஷங்கர் ராஜா கையில் பிடித்து அழைத்து செல்லும் அற்புதமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'ஆனந்த யாழ்' பாடலோடு, தன்னுடைய மகளை யுவன் ஷங்கர் ராஜா கையில் பிடித்து அழைத்து செல்லும் அற்புதமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷாவுடன் மொட்டை ராஜேந்திரன்..! வைரலாகும் புகைப்படம்..!
இயக்குனர் ராம், இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'தங்க மீன்கள்'. அப்பா - மகளின் ஆழமான பாசத்தை பற்றி எடுத்து கூறும் வகையில் இந்த படம் , கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி தேசிய விருதையும் பெற்றது. இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார். அதே போல் இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில், நா.முத்துக்குமார் பாடல் வரிசைகளில் அமைத்திருந்த 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்கு மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாருக்கு பல விருதுகள் கிடைத்தன.

இந்த படம் வெளியாகி 9 வருடங்கள் ஆன போதிலும் யுவன் இசையில், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடிய 'ஆனந்த யாழை' மீட்டுகிறாய் பாடல் ஒவ்வொரு பெண் பிள்ளைகளை பெற்ற தந்தைகள் மனதையும் நெகிழவைக்கும் பாடலாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், யுவனுக்கு இது மிகவும் ஸ்பெஷல் என்பதை வீடியோ மூலம் வெளிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் போட்டியாளர் பிந்து மாதவியா இது? கலைக்கான உடையில்... வேற லெவல் போட்டோ ஷூட்..!

யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதன் பின்னணியில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலைப் ஓடுகிறது.மகளின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் நடந்து செல்லும் இந்த காட்சிக்கும் இந்த பாடலில் உள்ள வரிகள் மிக பொருத்தமாக இருப்பதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோ இதோ...
