லோகேஷின் சக்சசுக்கு காரணம் ஸ்டண்ட் மாஸ்டர்களின் உழைப்பா? இல்ல ஆவர் டைரக்ஷனுக்கு கிடைக்கும் வெற்றியா?
ஒரு திரைப்படம் என்பது பல துறை சார்ந்த கலைஞர்களுடைய ஒட்டுமொத்த உழைப்பின் வெளிப்பாடு என்பதை ரசிகர்களாகிய நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஹீரோக்களும், இயக்குனர்களும் மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை வெற்றியடைய வைக்க பல்வேறு கலைஞர்கள் திறன்பட உழைக்கிறார்கள் என்பதை உணர வேண்டும்.

அந்த வகையில் ஒரு சினிமா என்று வரும் பொழுது, உடல் ரீதியாகவும் பெரிய அளவில் ரிஸ்குகளை சந்திக்கும் நபர்கள் ஸ்டண்ட் கலைஞர்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதே அவர் வாழ்கை. கடந்த சில ஆண்டுகளாக தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய ஸ்டண்ட் இரட்டைவர்களாக வளம் வருபவர்கள் தான் அன்பு மற்றும் அறிவு. அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம், லியோ மற்றும் விரைவில் அவர் இயக்க உள்ள சூப்பர் ஸ்டாரின் 171வது திரைப்படம் என்று அனைத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றி வருவது இந்த இரட்டையர்களான அன்பறிவு.
அண்மையில் ஒரு பெட்டியில் பேசிய சினிமா பிரபலம் ஒருவர், லோகேஷின் கதைகள் ஓட காரணம் அவர் படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் தான், ஸ்டண்ட் காட்சிகளை நேர்த்தியாக அமைக்க அன்பறிவு இருக்கின்றார்கள், ஆகையால் அதற்கு அவர் கதைக்களம் அமைத்தால் போதும் என்று கூறியுள்ளார்.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
ஒரு திரைப்படம் ஓட, அந்த படத்தில் வரும் அனைத்து கட்சிகளும் தான் காரணம், அதே போல ஒரு ஆக்சன் ஹீரோவின் படமென்றால் நிச்சயம் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு மிகவும் அதிகம். கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களிலும் ஸ்டண்ட் காட்சிகள் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும், அதே போல லியோ படத்தை ப்ரோமோஷன் செய்யும் பலரும் அதில் வரும் ஸ்டண்ட் காட்சிகளை மேற்கோள்கட்டி தான் ப்ரோமோஷன் செய்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
சரி, அப்படி என்றால் லோகேஷ் படங்கள் ஓட, அன்பறிவின் ஸ்டண்ட் காட்சிகள் மட்டும் தான் காரணமா என்றால், நிச்சயம் இல்லை. லோகேஷ் கனகராஜ் மிக நேர்த்தியாக கதை அம்சம் அமைக்க தெரிந்த ஒரு நேர்த்தியான இயக்குனர். விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மேக் அப் ஆர்ட்டிஸ்ட் கூட அவர்தான். ஆகவே தான் செய்யும் தொழில் நேர்த்தியை கடைபிடிக்கும் அவருடைய திரைக்கதை அமைப்பும், அவர் இயக்கமும் தான் அவருடைய படங்களில் வெற்றிக்கு வலு சேர்க்கிறது.
முன்வே கூறியதை போல, லோகியின் இயக்கம், இசையமைப்பாளர்களின் இசை, ஸ்டண்ட் கலைஞர்களின் அர்ப்பணிப்பு, இறுதியாக ஹீரோ, ஹீரோயின்களின் மாஸ் தான், ஒரு படத்தை சிறந்த படமாக்குகிறது. ஆகவே ஒரு திரைப்படம் வெற்றியடைய அனைவருடைய உழைப்பும் நிச்சயம் தேவை.
கமலின் அந்த அழகை, விஜய் சேதுபதியிடம் கண்டேன் - பளிச்சென்று மேடையில் ஓப்பனாக சொன்ன "அன்னலட்சுமி"!