கமலின் அந்த அழகை, விஜய் சேதுபதியிடம் கண்டேன் - பளிச்சென்று மேடையில் ஓப்பனாக சொன்ன "அன்னலட்சுமி"!
தமிழ் சினிமா உலகம், தன்னை அதிகமாக நேசித்தவர்களை உடனடியாக கை கொடுத்து தூக்கி விட வில்லை என்றாலும், நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவர்களை மாபெரும் நடிகர்களாக மாற்றி அழகு பார்க்க மறந்ததில்லை. அப்படி பல தடைகளை தாண்டி உருவான ஒரு நடிகர் தான் விஜய்சேதுபதி.
Pudhupettai
மக்கள் செல்வன் என்ற மிக பொருத்தமான பட்டத்துடன் தமிழ் திரை உலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து பல படங்களில் நடித்திருந்தாலும், புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் இவர் நடித்த சிறிய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பலே பாண்டியா போன்ற படங்களில் நடித்த இவருக்கு, கிடைத்த ஒரு பிரேக் தான் தென்மேற்கு பருவக்காற்று.
கொல்றியே டி... கவர்ச்சியை வர்ணித்து கமெண்ட் போட்ட காதலனுக்கு ஸ்ருதிஹாசனின் ரிப்ளை என்ன தெரியுமா?
Nadula Konjam Pakkatha Kanom
அந்த படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார், அதன் பிறகு வெளியான பீட்சா என்ற திரைப்படமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்கின்ற திரைப்படமும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்படும் எந்தவிதமான கதாபாத்திரத்தையும் மிக நேர்த்தியாக நடித்து முடிப்பர் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
Makkal Selvan
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அத்துனை திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக மாறின, ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக, குரல் வழியாக என்று, இன்று தமிழ் சினிமா திரை உலகில் இவர் ஏற்று கதாபாத்திரங்களே இல்லை என்று கூறலாம். மிகக் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். தற்பொழுது இவருடைய ஐம்பதாவது திரைப்படம் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ளது.
Abiramni
நேற்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை அபிராமி விஜய் சேதுபதி அவர்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். "விஜய சேதுபதி அண்ணா இந்த படத்தில் உங்களோடு நடித்தது ரொம்பவும் மகிழ்ச்சி, நான் பார்த்து ப்ரம்மித்துபோன கண்களை கொண்டவர் கமல்ஹாசன் சார், அதற்கு பிறகு அப்படி ஒரு அழகிய கண்ணை நான் உங்களிடம் கண்டேன். நீங்கள் படம் தேர்வும் செய்யும் முறை எனக்கு பிடித்திருக்கிறது" என்று கூறி தன் அன்பை வெளிப்படுத்தினர் அவர்.