இந்தியன் 2 படத்தில் திருமந்திரத்தின் நல்குரவு குறித்து சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து இந்தியன் 2 படத்திற்கான அறிவிப்பு 2017-ம் ஆண்டு வெளியானது. 2019-ம் ஆண்டு இப்படம் தொடங்கப்பட்ட நிலையில், கிரென் விபத்து, கொரோனா பெருந்தொற்று என பல தாமதங்களுக்கு பிறகு ஒருவழியாக ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.

"ஸ்கிரிப்ட் ரெடி.. 3 பாகங்களாக எடுக்கப்போறேன்" பொன்னியின் செல்வன் பாணியில் ஒரு படம் - இயக்குனர் சங்கர் ரெடி!

இந்தியன் 2 படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள நிலையில் படக்குழுவினர் புரமோஷன் செய்யும் விதமாக புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது நடிகர் பாபி சிம்ஹா இந்தியன் 2 குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் பேசும் பாபி சிம்ஹா, திருமந்திரம் நல்குரவு பற்றி குறிப்பிடுகிறார். சேனாபதி தியானம், தூக்கம் என எல்லாவற்றையும் மிகச்சரியான வாழ்க்கைமுறையை வாழ்கிறார் என்று அவர் கூறுகிறார். திருமந்திரத்தில் நல்குரவில் இதுகுறித்து விரிவாக சொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியன் 2 படத்தில் திருமந்திரத்தின் நல்குரவு குறித்து சொல்லப்பட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் மொத்தம் 3000 பாடல்கள் உள்ளன. யோகியான திருமூலர் பல்லாண்டு காலம் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. திருமூலர் தனது திருமந்திரத்தில் சிறப்பான வாழ்க்கைக்கான பயிற்சிகளையும் வழங்கி உள்ளார்.
மேலும் கல்லால் ஆன குழியை எப்படி தங்கத்தால் நிரப்ப முடியாதோ அதே போல் எத்தனை விதமான செல்வம் சேர்த்தாலும் வயிற்றுப்பசியை நிரந்தரமாக நீக்க முடியாது. நிரந்தரமாக பசியை எப்படி தீர்ப்பது என்ற அறிவை தெரிந்து கொண்டுவிட்டால், அதன் மூலம் இனி பசியே வராமல் இருக்கும் ஆன்மாவில் அனைத்து அழுக்குகளும் நீங்கி பெருவாழ்வு கிடைத்துவிடும் என்று திருமந்திரத்தில் நல்குரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

4DX திரையரங்கில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என பெருமையை பெரும் 'இந்தியன் 2'! லைகா வெளியிட்ட தகவல்!

மேலும் மனிதரின் ஆயுளுக்கு வாழ்க்கை முறை மட்டும் காரணமில்லை, உடலுறவின் போதே குழந்தையின் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது என்றும் திருமந்திரத்தின் ‘ யோகி சுக்கிலத்தை பாய்ச்சல்’ அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பாய்ந்தபின் அஞ்சுஓடில் ஆயுளும் நூறு ஆகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் புகுத்து அறிந்து இவ்வகை 
பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே” என்பதே அந்த பாடல்.

பொருள் :

ஆண் பெண் இன்பத்தின் முடிவில், ஆணிடம் இருந்து வெளிவரும் சுக்கிலம் (விந்து) பெண்ணின் கருப்பையில் விந்து பாய்ந்த பிறகு, ஆண் விடும் மூச்சுக்காற்று 5 விநாடிக்கு வெளிவந்தால் பிறக்கும் குழந்தை 100 ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். ஆண் விடும் மூச்சுக்காற்று 4 விநாடிக்கு வெளிவந்தால், பிறக்கும் உயிரின் 80 ஆண்டுகள் ஆயுளோடு பிறக்கும். எந்த அளவு மூச்சுக்காற்று வெளியேவருகிறது என்பதை பிரித்து பார்த்து அறிந்து கொண்டு, தமக்கு வேண்டிய அளவுக்கு மூச்சுக்காற்றை வெளியேறும்படி செய்வது யோக சாதனைகளை புரிந்த யோகியர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதால் அவர்களுக்கு ஆயுள் கிடையாது.” என்கிறது திருமந்திரம்.

சரி.. இதற்கும் இந்தியன் படத்திற்கும் என்ன சம்மந்தம் என்று தோன்றலாம். இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அதில் சேனாபதியின் அப்பா கேரக்டரும் இருப்பதாக சொல்லப்படுகிறது. சேனாபதியின் அப்பா கேரக்டர் ஒருவேளை திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த வித்தைகளை கற்று தான் 100 வயதுக்கு மேல் வாழும் குழந்தையை பெற்றிருக்கலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளது. சேனாபதியின் வயது தொடர்பான சர்ச்சைக்கும் இதுவே பதிலாக இருக்கலாம். எனினும் இந்தியன் 3 படம் வெளியான பிறகு தான் இது எந்தளவு உண்மை என்பது தெரியவரும்.