- Home
- Gallery
- "ஸ்கிரிப்ட் ரெடி.. 3 பாகங்களாக எடுக்கப்போறேன்" பொன்னியின் செல்வன் பாணியில் ஒரு படம் - இயக்குனர் சங்கர் ரெடி!
"ஸ்கிரிப்ட் ரெடி.. 3 பாகங்களாக எடுக்கப்போறேன்" பொன்னியின் செல்வன் பாணியில் ஒரு படம் - இயக்குனர் சங்கர் ரெடி!
Director Shankar : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டதோடு, மிக சிறந்த படங்களை எடுத்து புகழ்பெற்றுள்ள இயக்குனர் தான் சங்கர், அவருக்கு வயது 60.

gentle man
"ஜென்டில் மேன்" திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கியவர் தான் சங்கர். இவர் தஞ்சாவூரை அடுத்த கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக சென்னை வந்து, S.A சந்திரசேகர் அவர்களின் திரைப்படங்களில் பணியாற்ற துவங்கினர். அவ்வப்போது படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார்.
jeans
இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் பிரம்மாண்டமான படங்களாக உருவானது. குறிப்பாக பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய "ஜீன்ஸ்" திரைப்படம், சங்கர் இயக்கத்தில் வெளியான ஒரு தனித்துவமான படம் என்றே கூறலாம். அதில் வரும் பாடல் காட்சிகளாக இருந்தாலும் சரி, காட்சி அமைப்பாக இருந்தாலும் சரி, பிற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அப்படம் இன்றளவும் தனித்து நிற்கிறது.
indian 2
இந்நிலையில் சுமார் ஐந்து ஆண்டு கால போராட்டத்திற்கு நாளை ஜூலை 12ம் தேதி, இந்தியன் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்பட பிரமோஷன் பணியில் இருந்த இயக்குனர் சங்கர், தனது அடுத்த ப்ராஜெக்ட் குறித்த ஒரு முக்கியமான தகவலை செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.
Velpari
"பொன்னியின் செல்வன்" என்ற திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து, மணிரத்தினம் தமிழ் ரசிகர்களை அசத்திய வகையில், தற்பொழுது இயக்குனர் சங்கர் அவர்களும் அதேபோன்ற ஒரு இதிகாச கதையை கையில் எடுத்துள்ளார். "வேள்பாரி" என்கின்ற நாவலை கொரோனா காலகட்டத்தில் தான் படித்து முடித்து விட்டதாகவும், அதற்கான கதைக்களம் அமைக்கும் பணிகளும் முடிவடைந்து விட்டது என்றும் கூறியுள்ளார். மூன்று பாகங்களாக அந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ள சங்கர், அதற்கான கதாபாத்திர தேர்வில் தற்பொழுது இருந்து வருவதாக அவரே கூறியுள்ளார்.