Asianet News TamilAsianet News Tamil

ஆதிபுருஷ் டீசரை பார்த்து கடுப்பாகி... இயக்குனரை ரூமுக்கு அழைத்து மிரட்டினாரா பிரபாஸ்? - தீயாய் பரவும் வீடியோ

Prabhas : ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்த பின்னர் இயக்குனர் ஓம் ராவத்தை தன் அறைக்கு வருமாறு நடிகர் பிரபாஸ் கோபமாக அழைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

Is Actor Prabhas got angry with director Om Raut after watching Adipurush Teaser Viral video
Author
First Published Oct 6, 2022, 7:40 AM IST

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தன. இதனால் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் பிரபாஸ். அவர் நடிப்பில் தற்போது ஆதிபுருஷ் திரைப்படம் தயாராகி உள்ளது. 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். ரஜினியின் கோச்சடையான் பட பாணியில் மோஷன் கேப்சர் முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது.

இதையும் படியுங்கள்... லெஜெண்ட் சரவணனின் பெரிய மனசு! 24/7 நடக்கும் அன்ன தானம்..மாளிகை போன்ற வீடு மக்களுக்காக திறந்து வைத்த அண்ணாச்சி!

இதற்கு காரணம் அப்படத்தின் மோசமான வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் தான். டீசரை பார்த்து கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வந்தனர். இதற்கு விளக்கம் அளித்த இயக்குனர் ஓம் ராவத், இப்படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் பிரம்மாண்டத்தை உணர முடியும் என மழுப்பலான பதிலை அளித்தார்.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவின் போது டீசரை பார்த்த நடிகர் பிரபாஸ், மிகவும் அதிருப்தி அடைந்ததாகவும், அவ்விழாவுக்கு பின்னர் இயக்குனர் ஓம் ராவத்தை அவர் தன் அறைக்கு வருமாறு கோபமாக அழைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில், அவர் படத்தை பற்றி விவாதிக்க தான் அழைத்ததாகவும், இயக்குனரை மிரட்டவில்லை என்றும் நடிகர் பிரபாஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... 48 கோடிக்கு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய மாதுரி தீட்ஷித்..! என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

Follow Us:
Download App:
  • android
  • ios