48 கோடிக்கு சொகுசு அபார்ட்மெண்ட் வாங்கிய மாதுரி தீட்ஷித்..! என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித் மும்பையில் சொகுசு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருகான், சல்மான் கான் போன்ற முன்னணி பாலிவுட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாதுரி தீட்சித். திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட போதிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சில இந்தி ரியாலிட்டி டான்ஸ் ஷோக்களின் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மும்பையின் வோர்லி பகுதியில் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை சுமார் 48 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Image: Official Instagram account
இந்த அப்பார்ட்மெண்ட்டை இந்தியாபுல்ஸ் ப்ளூ நிறுவனம் வடிவமைத்துள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதி இதை வாங்குவதற்கு நடிகையின் தரப்பில் இருந்து பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மாதுரி வாங்கியுள்ள அப்பார்ட்மெண்ட் ஐம்பத்து மூன்றாவது மாடியில் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பரப்பளவு 5,384 சதுர அடி என்று கூறப்படுகிறது. இவருக்கென ஏழு கார் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரபிக் கடலின் வியூவை பார்த்து ரசிக்கும் படி இவரது அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: லெஜெண்ட் சரவணனின் பெரிய மனசு! 24/7 நடக்கும் அன்ன தானம்.. மளிகை போன்ற வீடு மக்களுக்காக திறந்து வைத்த அண்ணாச்சி
இந்தியாபுல்ஸ் ப்ளூ நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த சொகுசு அப்பார்ட்மெண்ட் குறித்த சிறப்பம்சங்களை புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. அழகான நீச்சல் குளம், கால்பந்து மைதானம், டென்னிஸ் கோர்ட், ஸ்குவாஷ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட், ஜிம் மற்றும் கிரிக்கெட் மைதானங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபரில், வொர்லியில் அமைந்துள்ள இந்தியாபுல்ஸ் ப்ளூ கட்டிடத்தின் இருபத்தி ஒன்பதாவது மாடியில் சுமார் 5,500 சதுர அடியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மாதுரி குத்தகைக்கு எடுத்திருந்தார். இதற்காக மாதத்திற்கு ₹ 12.5 லட்சம் வாடகைக்கு அவர் செலுத்தி வந்த நிலையில், தற்போது சொந்தமாகவே ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..! என்ன ஆனது? அவரே கூறிய தகவல்!