லெஜெண்ட் சரவணனின் பெரிய மனசு! 24/7 நடக்கும் அன்ன தானம்..மாளிகை போன்ற வீடு மக்களுக்காக திறந்து வைத்த அண்ணாச்சி!
நடிகரும், தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் மக்களுக்காக என் வீடு திறந்தே இருக்கும் என்றும், எந்நேரமும் அன்னதானம் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள தகவல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
'சரவணா ஸ்டோர்' குழுமத்தின் ஒருவரான, லெஜெண்ட் சரவணன், தன்னுடைய கடை விளம்பரத்திலேயே... முன்னணி நடிகர்களை மிஞ்சும் விதத்தில், ஆட்டம் பாட்டம், என தோன்றி மிகவும் பிரபலமானார். இவருடைய விளம்பரங்கள் சில விமர்சனங்களுக்கு ஆளான போதிலும், விடாப்பிடியாக அடுத்தடுத்த, விளம்பரப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, தன்னுடைய விளம்பரப்படத்தை இயக்கிய... இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் 'தி லெஜெண்ட்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மேலும் செய்திகள்: ஹீரோயின்களை மிஞ்சும் அழகு! மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து திருமணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஹரீஷ் கல்யாண்!
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும்... இந்த படத்தில் கூறப்பட்ட கருத்து பாராட்டுகளை குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து, பல இயக்குனர்கள் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க அணுகி வரும் நிலையில், ஒரு சிறு கேப் எடுத்துக்கொண்டு, மீண்டும் தரமான படத்தில் தன்னுடைய மாஸ் என்றியை கொடுப்பார் என கூறப்படுகிறது.
கதாநாயகனாக தன்னுடைய அறிமுகத்தை, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பின்னர்... சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லெஜெண்ட் சரவணன் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு போட்டுள்ள பதிவு தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பூ..! என்ன ஆனது? அவரே கூறிய தகவல்!
அதாவது லெஜெண்ட் சரவணன் மாளிகை போன்று, திருநெல்வேலியில் கட்டி வைத்திருக்கும் வீட்டில் 24/7 நாட்களும் தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், என்மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்து இருக்கும்… என கூறியுள்ளார். இவரது இந்த இரு பதிவுகளும் நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
மேலும் பலர் இந்த மனசு யாருக்கு வரும் என தெரிவித்து வருவதோடு... இதுவரை ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர், நடிகர் என்பதை தாண்டி... கொடை உள்ளம் கொண்டவர் என்றும் நிரூபித்து விட்டார் என தெரிவித்து வருகிறார்கள்.
தன்னுடைய கிராமத்தில் விஜயதசமி அன்று நடைபெறும், கோவில் விசேஷத்தின் புகைப்படங்கள் சில வற்றையும் இவர் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கசந்து போன காதல்... தற்கொலை செய்துகொண்ட நடிகர் லோகேஷின் மனைவி இவர் தானா..? வைரலாகும் புகைப்படம்.!