கசந்து போன காதல்... தற்கொலை செய்துகொண்ட நடிகர் லோகேஷின் மனைவி இவர் தானா..? வைரலாகும் புகைப்படம்.!

மனைவியின் விவாகரத்து முடிவால் விபரீத முடிவு எடுத்து, தன்னுடைய உயிரை மாய்துகொண்ட நடிகர் லோகேஷ் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Suicide actor Lokkshe  photo with his wife goes viral

தமிழில் ஒளிபரப்பான மாயாஜால தொடர்களான மர்ம தேசம், ஜீ பூம்பா பல்வேறு தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் லோகேஷ். மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த லோகேஷ்  தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நடிகர் லோகேஷ் சிறந்த நடிகர் என்றாலும், அவருக்கு திரைப்படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் என்று கூறப்படுகிறது. எனவே திரைப்படங்கள் இயக்க ஒருபுறம் வாய்ப்பு தேடி கொண்டே...  பல்வேறு குறும்படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் திடீர் என கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில், லோகேஷ் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவரை மீட்ட போலீசார்... அவர் விஷம் அறிந்து மயங்கி கிடப்பதை அறிந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Suicide actor Lokkshe  photo with his wife goes viral 

மேலும் செய்திகள்: விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!
 

உடனடியாக இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கோயம்பேடு சி.எம்.பி.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லோகேஷ் திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வந்தது, பின்னர் பின்னர் இவருடைய பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்ட போது  லோகேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்திற்கு மனைவி நோட்டீஸ் அனுப்பி நிலையில், மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

Suicide actor Lokkshe  photo with his wife goes viral

லோகேஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் மனைவியுடன் மாடம்பாக்கத்தில் லோகேஷ் வசித்து வந்தார். மேலும் கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்துள்ளது. ஒரு நிலையில் கருத்து வேறுபாடு முற்றியதால்... லோகேஷின் மனைவி அனிஷா அவரிடம் இருந்து பிரிந்து சென்றது மட்டும் இன்றி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எப்படியும் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்து, மீண்டும் தன்னுடன் மனைவி சேர்ந்து வாழ்வார் என நினைத்த லோகேஷுக்கு இது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: மாலத்தீவில் ரொமான்ஸில் மல்லு கட்டும் ஷ்ரேயா - சித்து..! காதல் பொங்க... பொங்க... வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!
 

Suicide actor Lokkshe  photo with his wife goes viral

இதன் காரணமாகவே லோகேஷ் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். மேலும் இவர்... தற்கொலை செய்து கொண்டது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு என்பதால், தற்கொலைக்கு முன்னர் மனைவியை சந்தித்தாரா? இருவருக்குள்ளும் மீண்டும் ஏதேனும் பிரச்சனைகள் வந்ததா..? இருவருக்கும் இடையே பிரச்னை வர என்ன காரணம் என... பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.  இந்த நிலையில் லோகேஷ் தன்னுடைய மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் முன்னணி நடிகர்களுடன் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios