Asianet News Tamil

நடிகர் இர்ஃபான் கானின் கடைசி ட்வீட்... கண்ணீர் விட்டு கதறித் துடிக்கும் ரசிகர்கள்...!

இந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்தியாவே கண்ணீர் வடிக்கும் இந்த சமயத்தில் இர்ஃபான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கடைசி ட்வீட் ரசிகர்களை மேலும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 

Irrfan khan Fans Crying For His Last Tweet about cancer
Author
Chennai, First Published Apr 29, 2020, 5:12 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பல முன்னணி நடிகர்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதைகளில் கூட சவாலாக நடித்து ஜெயித்து காட்டியவர் பிரபல நடிகர் இர்ஃபான் கான். ஹாலிவுட் திரைத்துறையினர் தங்களது படங்களில் நடித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கும் இந்திய நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். 2018ம் ஆண்டு முதலே கேன்சருடன் போராடி வந்த இர்ஃபான் கான் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

இதையும் படிங்க: க்யூட் பேபி டூ “பிக்பாஸ்” செலிபிரிட்டி வரை... நடிகை ஓவியா பொக்கிஷமாக பொத்தி வைத்த அரிய புகைப்பட தொகுப்பு...!

சமீபத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் சென்ற இர்ஃபான் கான், கொரோனா லாக்டவுன் காரணமாக திடீரென அங்கு சிக்கிக்கொண்டார். அப்போது அவரது அம்மா சயீதா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இர்ஃபான் கான் உடனடியாக இந்தியா திரும்ப முயன்றாலும் லாக்டவுனால் விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்தது. அதனால் நாடு திரும்ப முடியாத இர்ஃபான் கான், தனது அம்மாவின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதற வேண்டிய சோக சம்பவம் அரங்கேறியது. 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

 இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்ட மும்பையில் உள்ள மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 54 வயதான இர்ஃபான் கான் தனது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துவிட்டு காலமானார். இந்த செய்தியைக் கேட்டு ஒட்டு மொத்த இந்தியாவே கண்ணீர் வடிக்கும் இந்த சமயத்தில் இர்ஃபான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கடைசி ட்வீட் ரசிகர்களை மேலும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. 

கடந்த 12ம் தேதி இர்ஃபான் கான் தான் கடைசியாக நடித்த அங்ரேஜி மீடியம் என்ற படம் ஹாட் ஸ்டார் விஐபியில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், அதனை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என்றும் தான் சிரித்த முகத்துடன் இருக்கும் போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். தற்போது இர்ஃபான் கான் இறந்த நிலையில், அவரது புன்னகை பூத்த அந்த முகத்தை கண்டு ரசிகர்கள் கண்கலங்குகின்றனர். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

அதே தேதியில் மற்றொரு ட்விட்டர் பதிவில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த படத்தில் டிரெய்லரை பார்த்து என்ஜாய் பண்ணுங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ள இர்ஃபான் கான், புற்றுநோயை தன் உடலில் இருக்கும் அழையா விருந்தாளி என்று நகைச்சுவையுடன் கிண்டல் செய்துள்ளார். அந்த ஆடியோவும் இர்ஃபான் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios