தமிழ் சினிமாவில் அடல்ட் படமான ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

ஒரு முழு ஆபாச படத்திற்கு கூட இவ்வளவு கேவலமான காட்சிகள் வைக்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பார்க்கவே கண்கூசும் அளவிற்கு படுக்கை அறை காட்சிகளும், காதுகளால் கேட்க முடியாத அளவிற்கு விரசமான இரட்டை அர்த்த டைலாக்குகளும் முகம் சுளிக்கிறது. இதை கண்டித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

 

இதையும் படிங்க: சொக்க வைக்கும் குட்டி சிரிப்பு... அழகு மகள் ஐலாவின் போட்டோக்களை வெளியிட்ட ஆல்யா மானசா...!

அதில், “"இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?  கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன். மேலும் இப்படிப்பட்ட ஆபாச படங்கள் திரையுலகிற்கு ஆகாதவை என்றும் கண்டித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த இரண்டாம் குத்து பட இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார். தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிராஜா இயக்கிய “டிக் டிக் டிக்” பட போஸ்டரை பதிவிட்டு, “டி க் டிக் டிக்” கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” என பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் சோசியல் மீடியாவை கொந்தளிக்க வைக்க நீயெல்லாம் பாரதிராஜாவை கேள்வி கேட்குறீயா? என நெட்டிசன்கள் வெளுத்து வாங்க ஆரம்பித்தனர். 

"'இரண்டாம் குத்து' படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கணத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இதையும் படிங்க: குட்டை டவுசருடன் குதூகலமாக ஊர் சுற்றும் சாக்‌ஷி... பீச் ரிசார்ட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!

 

தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்." என மன்னிப்பு கோரியுள்ளார்.