'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா... பாடலை தெலுங்கில் பாடி இருந்த பாடகி இந்ரவதி சௌகான் தற்போது தமிழ் மொழியில் பாடல் பாட உள்ளார்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடகளுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸ் பட, ரஷ்மிகா ஆடிய கவர்ச்சி நடனத்தையே ஓரம் கட்டும் அளவில் இருந்தது.
இந்த பாடல் பாடலை தெலுங்கு மொழியில் கிக் ஏற்றும் காந்த குரலில் "ஊ அண்டா வா" என பாடி இருந்தவர் "இந்ரவதி சௌகான்" தற்போது இவர் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் ,எல் என் எச் கிரியேஷன் க. லட்சுமிநாராயணன் தயாரிப்பில்
" என்ஜாய் " என்கிற படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார்.
2022 Top 5 songs: 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடங்கள்..!

"சங்கு சக்கர கண்ணு" என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார். பாடலை விவேகா எழுதியிருக்கிறார். KM ரயான் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
புஷ்பா படத்தில் இவர் பாடிய "ஊ.. அண்டா" வா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியது போல " சங்கு சக்கர கண்ணு"பாடலும் பெரும் வரவேற்பை பெரும் என்கிறார். தமிழில் பாடுவது பெரும் விருப்பமாகவுள்ளதாகவும், தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். எல். என்.எச் கிரியேசன் K. லட்சுமி நாராயணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
