ஒரு பாட்டுக்கு சம்பளம் 3 கோடி? கிறுகிறுக்கவைக்கும் "Singers-ன் சம்பளம்" - அவர் தான் டாப்புனு சொல்றாங்க!
ஒரு பாட்டுக்கு 3 கோடி, அதுவே சில சமயங்களில் 5 கோடி வரை நீளும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்தை பொருத்தவரை திரையில் தோன்றி நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளத்தை கேட்டு நாம் பலமுறை வியந்திருப்போம். அதிலும் குறிப்பாக தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம், ரிலீசுக்கு முன்பே பெரிய அளவில் வியாபாரம் ஆகி வரும் நிலையில், அவருடைய 68வது திரைப்படத்திற்கு சுமார் 200 கோடி வரை சம்பளம் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய திரைத்துறையை பொருத்தவரை அதிக அளவில் சம்பளம் வாங்கும் பாடகர்கள் குறித்த சில சுவாரசிய தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஸ்ரேயா கோசல், அர்ஜித் சிங் போன்ற பல முன்னணி பாடகர்கள் சுமார் ஐந்து முதல் 20 லட்சம் வரை ஒரு பாடலுக்கு சம்பளமாக பெறுகிறார்களாம்.
ஆனால் ஒரு இசையமைப்பாளர் மட்டும் தான் பாடும் ஒரு பாட்டுக்கு சுமார் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட பல முன்னணி பாடகர்களை விட இது 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு யாரும் அல்ல, நமது இசை புயல் ஏ.ஆர் ரகுமான் தான்.
இதையும் படியுங்கள் : "நா ரெடி".. லியோ பட பாடலில் மாற்றம் செய்த லோகேஷ்
ஒரு பாட்டுக்கு 3 கோடி, அதுவே சில சமயங்களில் 5 கோடி வரை நீளும் என்றும் கூறப்படுகிறது, அதேபோல அவர் அவ்வப்போது நடத்தும் மேடை கச்சேரிகளுக்காக ஒரு கோடி ரூபாய் வரை கூட சம்பளமாக பெற்று வருகிறாராம். இருப்பினும் இவை எதற்கும் உரிய ஆதாரம் இல்லை, அவ்வப்போது கிடைக்கப்பெறும் சிறு சிறு தகவல்களைக் கொண்டே இந்த கூற்று கூறப்படுகிறது.
ரகுமானுக்கு அடுத்தபடியாக ஸ்ரேயா கோஷல் ஒரு பாட்டுக்கு 25 லட்சம் வரை பெற்று வருகிறாராம். ஒரு பாடல் உருவாகும் பொழுது இசை அந்த பாடலை எந்த அளவுக்கு மெருகேற்றுகிறதோ, அதற்கு இணையாக அந்த பாடலை மெருகேற்றுவது அந்த பாடகர் மற்றும் பாடகியின் குரல் என்பதை எவராலும் மறுக்க முடியாது, இருந்தாலும் 3 கோடி என்றால் நமக்கு சற்று தலை சுற்றல் ஏற்படுத்திக்கிறது என்னமோ வாஸ்தவம் தான்.
இதையும் படியுங்கள் : அதெல்லாம் போலீஸ் பார்த்துப்பாங்க.. மாமன்னன் விவகாரம் - நீதிமன்றம் அதிரடி