சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தா போலீஸ் பார்த்துப்பாங்க - மாமன்னன் படத்திற்கு தடைகோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கோரிய மனுவை அவசர வழக்காக ஏற்க ஐகோர்ட் மதுரை கிளை மறுத்துள்ளது.

Highcourt Madurai Branch refuse to ban udhayanidhi's Maamannan movie

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இதில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். மேலும் வில்லனாக பகத் பாசிலும், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ள இப்படம் ஜூன் 29-ந் தேதி பக்ரீத் விடுமுறையில் வெளியாக உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன.

இதனிடையே இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபுறம் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு தடைகோரி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் சுதந்திரப் போராட்ட வீரர் காத்தப்ப புலிதேவனை தான் மாமன்னன் என அழைப்பார்கள், அவரை தவறாக சித்தரிக்கும் வகையில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படம் அமைந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... "அப்பாவுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது" - மனம் திறந்த இந்திரஜா ரோபோ சங்கர்!

Highcourt Madurai Branch refuse to ban udhayanidhi's Maamannan movie

இதனால் இப்படத்தை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்திருந்ததோடு இதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு மனுதாரர் தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.]

மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தணிக்கை குழு அனுமதி வழங்கிய பின்னர் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை போலீஸ் பார்த்துக் கொள்வார்கள். திரைப்படங்களில் பார்ப்பதை மக்கள் இரண்டு நாட்களில் மறந்துவிடுவார்கள். அனைவருக்கும் கருத்துரிமை, பேச்சுரிமை உள்ளது எனக்கூறி இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படியுங்கள்... நா ரெடி பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பால் தளபதி போட்ட உத்தரவு... அதிரடியாக லியோ பட பாடலில் மாற்றம் செய்த லோகேஷ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios