நா ரெடி பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பால் தளபதி போட்ட உத்தரவு... அதிரடியாக லியோ பட பாடலில் மாற்றம் செய்த லோகேஷ்
விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெறும் நா ரெடி பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பை அடுத்து அப்பாடலில் படக்குழு அதிரடி மாற்றம் ஒன்றை செய்துள்ளது.
Leo
விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடிய நா ரெடி என்கிற பாடலும் வெளியிடப்பட்டது.
Leo
நா ரெடி பாடலை விஜய்யுடன் சேர்ந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாரும் பாடி இருந்தார். இப்பாடல் வெளியான உடனே வைரல் ஹிட் ஆனது. இன்ஸ்டாவில் திரும்பிய பக்கமெல்லாம் நா ரெடி பாடலுக்கு நடனமாடி பலரும் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். இந்த அளவுக்கு ரீச் ஆன இப்பாடலுக்கு கடும் எதிர்ப்புகளும் வலுத்து வந்தது. இதற்கு காரணம் இப்பாடல் வரிகள் முழுக்க புகையிலை மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது தான்.
இதையும் படியுங்கள்... வெளிநாட்டில் வெறித்தனமா ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்
Leo
அதுமட்டுமின்றி நடிகர் விஜய் சிக்ரெட் பிடித்தபடி நடனமாடும் படியான காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்ததால், இது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் எனக்கூறி அரசியல் வாதிகள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை விஜய்யின் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். ஒரு பள்ளி சிறுவன் விஜய்யை புகைபிடிக்காதிங்க அங்கிள் என அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு இருந்ததும் வைரலானது. இப்பாடலுக்கு தடை விதிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
Leo
இப்படி தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வந்ததால், அதிரடி முடிவெடுத்த விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் சொல்லி அப்பாடலில் ‘புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்கிற எச்சரிக்கை வாசகத்தை சேர்க்க சொல்லியுள்ளார். இதையடுத்து விஜய் சொன்ன அந்த மாற்றத்தை சைல்ண்டாக செய்து இருக்கிறார் லோகேஷ். தற்போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் அந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்று உள்ளது.
இதையும் படியுங்கள்... "அப்பாவுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்தது" - மனம் திறந்த இந்திரஜா ரோபோ சங்கர்!