ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' படத்தை தடை செய்ய வேண்டும்..! இந்திய தேசிய லீக் புகார்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக, அடுத்தடுத்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... சத்தம் இல்லாமல் வளர்ந்து வளர்ந்து வருகிறார். இவர் தற்போது ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா.
தனுஷின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு! ஆப்பு வைத்த மாவட்ட ஆட்சியர்! இன்று அனுமதியோடு ஆரம்பமான படப்பிடிப்பு!
இப்படத்தில் தன்னுடைய குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், தன்னைப்போல் அவர்கள் எதற்கும் ஏங்கிவிடக்கூடாது என நினைக்கும் ஒரு சராசரி தாயாகவும், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் நடித்துள்ளார். மேலும் தன்னுடைய மத கோட்பாடுகளை தாண்டி வேலைக்கு செல்வதால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தான் இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில சர்ச்சைக்கு இடமான வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
படத்தின் டீசர் வெளியான போதே, கண்டிப்பாக இப்படத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வர வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், தற்போது அதற்கு ஏற்ற போல் இந்திய தேசிய லீக் கட்சி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த படம் குறித்து இந்திய தேசிய லீக் கட்சி அளித்துள்ள புகாரில், ஃபர்ஹானா திரைப்படத்தின், டீசர் காட்சியில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இஸ்லாமிய பண்பாடு கலாச்சாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஃபர்ஹானா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான புர்கா திரைப்படத்தையும் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.