கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமான 'இந்தியன்' படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி வருகிறது 'இந்தியன் 2 ' . உலகநாயகன் கலஹாசனை வைத்து இந்த படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம், குவாலியர், போன்ற பல்வேறு பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் எதிர்பார்த்ததை விட, படப்பிடிப்பு பணிகள் நீண்டு கொண்டே போவதால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் வெளியாக நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.