எந்த ஒரு தொந்தரவும் இன்றி, படப்பிடிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக,  படக்குழுவினர் செட் அமைத்து நடத்துவதற்காக பல புரோடக்ஷன் நிறுவனங்கள் செயல் பட்டு வருகிறது. 

அதில் ஒன்று தான் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து ஏற்பட்ட EVP ஸ்டுடியோவுக்கு. இதே போல் சிறியது முதல் பெரியது வரை சென்னையில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

இந்த விபத்து குறித்து, பெப்சி அமைப்பின் தலைவரும், பிரபல இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

அப்போது... கிரேன் போன்ற பெரிய உபகரணங்கள் சினிமா துறையில் இல்லாததால், மற்ற இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. இப்படி பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பற்றி சினிமா துறையினருக்கு புரிதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு பணிக்காக புரோடுக்ஷன் நிறுவனங்கள் கட்டி வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களில் கண்டிப்பாக ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் இது போன்ற நிறுவனங்களில் படப்பிடிப்பு நடந்த அனுமதி வழக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியன் 2 விபத்தில், மூன்று பேர் உயிரிழந்தும்  இதுவரை, ஒருவர் கூட அந்த நிறுவனத்தின் சார்பில் இருந்து, என்ன ஆனது என்று கூட கேட்காதது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதுவே ஏவிஎம் ஸ்டுடியோவாக இருந்தால், உடனடியாக அங்கு உள்ளவர்கள் மருத்துவனையில் அனுமதித்திருப்பார்கள் என்றும், என்ன ஆனது என்று  கேட்டிருப்பார்கள் என ஏ.வி.எம் ஸ்டூடியோ பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

மேலும் செய்திகள்: கமல் - ஷங்கருக்கு சம்மன்...!

யார், தங்களுடைய நிபந்தனைகளுக்கும் தோல் கொடுக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்ற உள்ளதாக அவர் கூறியுள்ளது, மற்ற தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதுள்ளது.