19 ஆம் தேதி இந்தியன் 2  படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொண்ட போது, பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், காயமடைந்த 9 பேர் உட்பட, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதன் முதல் கட்டமாகவே நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் இந்தியன் 2 பட விபத்து குறித்து, உரிய பாதுகாப்பு இல்லாமல் படப்பிடிப்பு மேற்கொண்டதாக, லைக்கா நிறுவனத்தில் மீது வழக்கு தொடர அதன் இணை இயக்குனர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.