in Salman Khans film prabas will introduce
பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் படத்தின்மூலம் பிரபாஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
'பாகுபலி 2' திரைப்படத்தின் மூலம் தேசியளவில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவர்ந்தவர் பிரபாஸ்.
தற்போது பாலிவுட்டில் எப்போது களமிறங்குவார் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தான் பிரபாஸை பாலிவுட்டில் அறிமுகம் செய்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது.
ஆனால், தற்போது ஆக்ஷன் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் பிரபாஸை அறிமுகம் செய்ய ரோஹித் திட்டமிட்டு வருகிறாராம்.
'பாகுபலி' வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் சுஜித் இயக்கத்தில் 'சாஹோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'பாகுபலி' நாயகி அனுஷ்கா ஷெட்டி நடிக்கிறாராம்.
இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார் போன்றவரை கூடுதல் தகவல்கள்.
