தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வந்த 'இடுப்பழகி' இலியானா, கடைசியாக தமிழில் விஜய்யுடன் 'நண்பன்' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, பாலிவுட்டிலேயே முகாமிட்டு முன்னணி இடத்தை பிடிக்க அவர் போராடி வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவ, மீண்டும் தெலுங்கு பக்கமே திரும்பப் போய்விடலாமா? என்ற யோசனையிலும் இலியானா உள்ளார்.
இருந்தாலும், 'வந்தது வந்தாச்சு ஒரு கை பார்த்துவிடலாம்' என்பது போல் மும்பையிலேயே தங்கியுள்ள அவர், தொடர்ந்து தனது பிகினி மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் அள்ளித் தெளித்து வருகிறார்.


தனது பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்பே இந்த வீடியோவை வெளியிட்டு, பிகினி விருந்து அளித்துள்ள இலியானாவுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.
