தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜா உலகம் முழுவதும் தனது இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார். முன்னதாக இவர் சென்னையில் பிரமாண்டமாக நடத்தி இருந்த இசைக் கச்சேரி விழாவிற்கு தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர். 70 வதுகள் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இளையராஜாவின் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தாலாட்டு முதல் துக்க நிகழ்வு வரை அனைத்திற்கும் இளையராஜா பாட்டு தான். இசையால் இவரது புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிக் கிடைக்கிறது. 

அங்குள்ள தமிழர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார் இளையராஜா. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து நாட்டில் இசை கச்சேரியை நடத்த முடிவு செய்துள்ளார் இளையராஜா. இவர் இசையில் ஹிட் அடித்த பாடல்கள் இசை கச்சேரியின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு சென்றடைவது வழக்கம். அந்த வகைகள் தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் நியூசிலாந்து மியூசிக் கான்செர்ட்க்கு தயாரா என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

Scroll to load tweet…

இதுபோன்று இளையராஜா வரும் அக்டோபர் 15ஆம் தேதி துபாயிலும் இசை கச்சேரி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை பார்த்த நியூசிலாந்து வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் பதிவிற்கு மேஸ்ட்ரோ வெயிட்டிங் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி பொங்கும் கண்களால் கைது செய்யும் சீதா ராமம் நாயகி..மிருணாள் தாகூரின் ஹாட் க்ளிக்ஸ்

Scroll to load tweet…

இளையராஜா போன்றே அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் பல நாடுகளில் இசைக்கச்சேரி நடத்து வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அசத்தி இருந்தார்.

View post on Instagram