Ilaya raja give thanks to all for get padma vibushan award

பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கு அனைவரும் மிகுந்த அன்புடன் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் வருவது தனக்கு மிகுந்த உற்சாகத்தை தருவதாக இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்திய அரசின் இரண்டாவத பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. 

இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த, கமலுஹாசன், விஷால், சிவகுமார், நாசர், பார்த்திபன் , என திரையுலகமே திரண்டு வாழ்த்துத் தெரிவித்தது.

இதே போன்று முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்,ராஜா போன்ற அரசியல் கட்சியினரும் இளையராஜாவுக்னகு வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தனது குடும்பத்தினருடன் இளையராஜா வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். இதே போன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன், இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்றதோடு வாழ்த்தும் தெரிவித்தார்.

மேலும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களும் உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு இளைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செயிட்டுள்ள அறிக்கையில், ‘எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை, என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த, உலகெங்கிலும் பரவி இருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில்துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவத்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தை தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும்... மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டு இருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி என இளையராஜா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.