அமெரிக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில்போர்டில், ஒருவரது புகைப்படம் இடம்பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜாவுக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அமெரிக்காவில் அமைந்துள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில்போர்டில், ஒருவரது புகைப்படம் இடம்பெறுவது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு நடந்தால் அது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அந்த பெருமை தற்போது இளையராஜாவுக்கு கிடைத்திருக்கிறது.

பாடல்கள் ஒலிபரப்பு செய்யும் செயலியுடன் இணைந்து தன்னுடைய பிளேலிஸ்டுகளை பிரபலப்படுத்தும் வகையில் இசைஞானி இளையராஜா சமீபத்தில் விளம்பர படமொன்றில் நடித்தார். தற்போது இந்த விளம்பர படத்தின் போஸ்டர் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இத்தகைய பெருமைமிகு தருணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் இளையராஜா.

கரியரை பொறுத்தவரை தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்துக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.