இளையராஜா அதிவேகமாக கம்போஸ் செய்த எவர்கிரீன் ஹிட் பாடல், வெறும் 5 நிமிஷம் தான் ஆச்சாம்!
இசைஞானி இளையராஜா கோபத்தில் கம்போஸ் செய்த பாடல் ஒன்று எவர்கிரீன் ஹிட்டான கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா, இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதற்கு காரணம் அவர் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் தான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடல்களுக்கு பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும். அப்படி ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சின்னக் கவுண்டர் படத்துக்காக இளையராஜா அதிவேகமாக கம்போஸ் செய்த பாடல் பற்றி பார்க்கலாம்.
பாடலுக்கு சிச்சுவேஷன் சொல்லிவிட்டு இயக்குனர் ஆர்வி உதயகுமார் மறுநாள் பார்க்கும் போது இளையராஜா ஒரு பாடலை கம்போஸ் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அந்த பாடல் தன் படத்துக்கு செட் ஆகாது என தோன்றியதால் பிடிக்கவில்லை... தனக்கு வேறு பாடல் வேண்டும் என கேட்டிருக்கிறார் உதயகுமார். இதனால் கோபமடைந்த இளையராஜா, அந்த பாட்டுக்கு என்ன குறைச்சல் என கேட்டிருக்கிறார். அதற்கு உதயகுமார்.. இது மணிரத்னம் படத்துக்கு செட் ஆகும். ஆனால் என் படத்துக்கு முத்துமணி, பாசிமணினு வர்ற மாதிரி கிராமத்து சாயல்ல பாட்டு வேணும் என கேட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தொட்டதெல்லாம் ஹிட்டு; ராஜாவுக்கு கொட்டிய துட்டு! இளையராஜா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
உடனே தன் அருகில் இருந்த ஹார்மோனிய பெட்டியை சட்டென இழுத்து முத்துமணி மாலை என பாடி டியூன் போட்டிருக்கிறார். அவர் டியூன் வாசிக்க வாசிக்க, ஆர்வி உதயகுமார் எழுதிய பாடல் தான் சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற ‘முத்துமணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட’ என்கிற பாடல். இந்த பாடலை வெறும் ஐந்தே நிமிடத்தில் கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம் இளையராஜா. அவர் அதிவேகமாக கம்போஸ் செய்த பாடலும் இதுதான் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இப்பாடல் வரிகளை வெறும் 15 நிமிடங்களில் எழுதிவிட்டாராம் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். அவர் வேகமாக எழுதிய பாடலும் இதுதானாம். இப்படி கோபத்தில் வேகவேகமாக இளையராஜா கம்போஸ் செய்த இந்த பாடல் தான் இன்று ஒரு எவர்கிரீன் ஹிட் பாடலாக இருக்கிறது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டபோது தான் இந்த தகவலை இயக்குனர் ஆர்வி உதயகுமார் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த இளையராஜா - அதுவும் ஒன்னில்ல 2 முறை!