If the film comes naturally everyone can go to Bombay - Pranjitha ..
ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்காக மும்பை புறப்படுகிறார்.
கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இரண்டாவது முறையாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார்.
இந்தப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த படம் முழுவதையும் மும்பையில் படமாக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக தாராவி பகுதியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதனால், ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் மும்பை புறப்பட்டு சென்றுவிட்டனர்.
படம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக செட் போட வேண்டாம் என்று ரஞ்சித் தாராவி புறுப்பட்டுள்ளார்.
இடம் பெரிய சவாலாக இருக்கும் என்று இயக்குநரிடம் சொல்லியும் பா.இரஞ்சித் செட் போடாமல் மும்பை சென்று எடுக்க வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வருகின்ற 28-ஆம் தேதி ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டு செல்கிறார். ஒரு மாத காலம் ஷெட்யூலுக்கு பிறகு ரஜினிகாந்த் சென்னை திரும்புவார்.
